சென்னை: தமிழ்நாட்டைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் வெற்றுக் கூச்சல் போடுகிறார் நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் என்று திமுக விமர்சனம் செய்துள்ளது.
இந்தி மொழிக்கு எதிராக திமுக குரல் கொடுத்து வருகிறது. அப்படியானால் தமிழ் படங்களை ஏன் இந்தியில் மொழி பெயர்க்கிறீர்கள், அங்கு ஏன் உங்களது படங்களை திரையிடுகிறீர்கள் என்று பவன் கல்யாண் கேட்டிருந்தார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சையத் ஹபீசுல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் சையத் ஹபீசுல்லா கூறுகையில், முதலில் தமிழ்நாட்டைப் பற்றி பவன் கல்யாண் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாமல் வெற்றுக் கூச்சல் போடக் கூடாது. இங்கு இந்தி உள்பட எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு ஒரு போதும் தமிழ்நாடு தடை விதித்ததே கிடையாது, எதிர்த்ததும் கிடையாது. ஆனால் இங்கு இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். அதை தமிழ்நா்டு அனுமதித்ததும் கிடையாது.
தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா உள்ளது. சென்னையிலும், திருச்சியிலும் அதன் கிளைகள் உள்ளன. அவர்கள் இந்தி கற்றுத் தருகிறார்கள். யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் அதில் சேர்ந்து படிக்கிறார்கள். நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. இதை யாருமே தடுத்தது கிடையாதே. ஆனால் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் மூலமாக இந்தியை மறைமாகவும், நேரடியாகவும் கட்டாயப்படுத்துவதைத்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது என்றார் ஹபீசுல்லா.
நிபுணர்கள் ஆலோசனையை மதிப்போம்.. நடிகர்கள் ஆலோசனை தேவையில்லை
திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவனும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளார். அவர் கூறுகையில், 1938ம் ஆண்டிலிருந்தே இந்தித் திணிப்பை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் சட்டமே கொண்டு வந்துள்ளோம். இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டின் கொள்கை என்ற நடைமுறையே தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி வருகிறது. நிபுணர்களின் கருத்துத்தைத்தான் நாங்கள் கேட்போம், நடிகர்களின் ஆலோசனைகள் எங்களுக்குத் தேவை இல்லை.
இரு மொழிக் கொள்கை தொடர்பாக தமிழ்நாட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1968ம் ஆண்டு பவன் கல்யாண் பிறந்திருக்கவே இல்லை. தமிழ்நாட்டின் அரசியல் அவருக்குத் தெரியாது கல்வியை தாய்மொழியில்தான் கற்றுத் தர வேண்டும் என்பதே எங்களது கொள்கை. அதுதான் மக்களுக்கு சிறந்த அறிவை வழங்க முடியும் என்பது எங்களது அசைக்க முடியாத கொள்கை.
பவன் கல்யாணுக்கு எப்படியாவது பாஜகவை ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் ஏதாவது ஆதாயம் அடையலாம் என்பது அவரது எண்ணம். அதனால் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார் இளங்கோவன்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}