சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டதைக் கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2024- 25 ஆம் நிதியாண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக தாக்கல் செய்தார். இதில் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு மட்டும் ஏராளமான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இதனை கண்டித்து ராகுல் காந்தி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவிற்கான பட்ஜெட் கிடையாது, பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்படும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் அறிவித்தனர்.
இந்த நிலையில்பாஜக அரசை கண்டித்து ஜூலை 27ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி இன்று இப்போராட்டம் நடைபெற்றது. சென்னையில் இரண்டு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக முன்பு நடந்த போராட்டத்தில், எம்.பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஏராளமான திமுக தொண்டர்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிரான பதாகிகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
அதேபோல் சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், திரளானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை நடத்தினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}