சென்னை: மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் .
கடந்த 29ஆம் தேதி வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக கன மழை பெய்த பகுதிகளில் கடுமையான பொருட் சேதங்களும் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மழைநீர் தேங்கி இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று சென்னை வரும் மத்திய குழு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியதை அடுத்து திமுக எம்பிகளும் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!
Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்
வலுவிழந்தத காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!
Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!
Sabarimalai: இன்று சபரிமலை மண்டல பூஜை 2024 .. தங்க அங்கியில் ஐயப்பன் தரிசனம்.. குவியும் பக்தர்கள்
{{comments.comment}}