சென்னை: எல்லாரும் திமுகவைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சருக்கு போட்டியாக எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கினார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதன்பின்னர் கட்சிப்பணிகள் ஒவ்வொன்றாக செய்து 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து இவர் செய்யும் ஒவ்வொரு வளர்ச்சிப்பணிகளையும் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்து வருகிறார். குறிப்பாக, இவர் நடத்திய கட்சியின் முதல் மாநாட்டின் போது ஒவ்வொரு ஏற்பாடுகளும் மக்கள் கவனத்தை பெற்றது. அது மட்டும் இன்றி முதல் மாநாட்டில் புதிய கட்சி தலைவர் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், அவரின் பேச்சு அரசியல் களத்தில் அனல் பறக்கச் செய்தது. அந்த பேச்சு குறித்து கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பல்வேறு கட்சியினர்களும் விவதாம் நடத்தி வந்தனர்.
அதன்பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்ட நிறைவு விழாவும் சிறப்பாக நடத்தினார். அதற்கு அடுத்த படியாக நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் இந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதுவரைக்கும் எந்த தலைவரின் பெயரையும் கூறாத விஜய் நேற்று திமுக மற்றும் பாஜக கட்சியின் தலைவர்களின் பெயர்களை கூறி பேசியிருந்தார். இது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசுகையில், ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும் என்று நினைக்கிற அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனுங்கிறது அரசியலா நீங்களே சொல்லுங்க. எல்லோருக்கும் நல்லது நடக்கிறது தானே அரசியல். அதுதான் நம் அரசியலும்.
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்துகின்ற நம்மளுக்கு எதிராக இவர்கள் செய்கின்ற செயல் ஒன்றா இரண்டாங்க. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே.. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என அறிவிப்புகள் அறிவித்துவிட்டு இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம்.
2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவிற்கும் தவெகவுற்கும் தான் போட்டி. சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன். நேத்து வந்தவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறானு சொல்றீங்க. அது நடக்கவே நடக்காதுன்னும் சொல்றீங்க. அப்படி எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை ஏன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அணையை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சாதாரணமான காத்து சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாக கூட மாறும் என்று கூறியிருந்தார்.
2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு திமுக எம்.பி.கனிமொழி பதில் கூறுகையில், எல்லாரும் திமுகவைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சருக்கு போட்டியாக எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!
மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே
ஏப்,6ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம்: தமிழக காங், தலைவர் செல்வபெருந்தகை
தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!
கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? : டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!
Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!
{{comments.comment}}