Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

Dec 26, 2024,07:24 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து வரும் தகவல்களும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சீனியர் மாணவரோடு இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவியை ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த நபரை சில மணி நேரங்களில் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.




அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலமுறை இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியாணி விற்பனை செய்து வரும் ஞானசேகரன், தினசரி ரூ. 20,000 அளவுக்கு வருமானம் ஈட்டக் கூடியவராகவும் இருந்துள்ளார். அவர் மீது பலமுறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டவரும் கூட. ஹிஸ்டரி ஷீட்டராகவும் வலம் வந்துள்ளார்.


இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கனிமொழி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.


பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்