நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து திமுக எம்பி கனிமொழி கூறிய பதில் என்ன தெரியுமா?

Aug 12, 2024,01:21 PM IST

சென்னை:   கடின உழைப்பு மற்றும் பாதை குறித்து தெளிவாக புரிந்தால் தான் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ளார் விஜய். அதே தெளிவோடும், உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள  நடிகர் விஜய்க்கு அட்வைஸ் கூறியுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் புதிதாக கட்சி ஆரம்பித்து 2026ம் ஆண்டு தேர்தலில் களம் காண திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். விஜய் ஆரம்பித்த தவெக கட்சி குறித்து பலதரப்பட்ட கருத்துகளை ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர்.




ஒரு சிலர் விஜய் கட்சிக்கு வாழ்த்துகளையும், அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவர் கட்சி ஆரம்பித்ததற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில், தவெக மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை, அறிவிக்கப்படவும் இல்லை.


இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக எம்பி கனிமொழி கருத்து ஒன்றை கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு விருது வழங்கப்பட்டது. 


அப்போது, விஜய்யின் அரசியல் வருகை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்