சென்னை: 2019 லோக்சபா தேர்தலின்போது இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக உருவெடுத்திருந்த திமுக இந்த முறை 5வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
கடந்த முறை சோபிக்கத் தவறிய சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ் ஆகியவை இந்த முறை திமுகவை விட அதிக அளவில் சீட் வாங்கியதால் திமுக 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டது. அதேசமயம், 3 கட்சிகளுமே ஒரே கூட்டணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் இக்கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் திமுகவுக்கு 24 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் சில வேற்று கட்சி வேட்பாளர்கள் உதயசூரின் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டதால் இவர்களும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்களுடன் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முதலிடத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 52 எம்.பிக்களைக் கொண்டிருந்தது. 3வது இடத்தில் திமுக இருந்தது. அதற்கு அடுத்த இடங்களில் திரினமூல் காங்கிரஸ் (22), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (22), , சிவசேனா (18), ஐக்கிய ஜனதாதளம் (16), பிஜூ ஜனதாதளம் (12), பகுஜன் சமாஜ் கட்சி (10) ஆகிய கட்சிகள் இருந்தன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடிக் கட்சிக்கு 2019 தேர்தலில் வெறும் 5 எம்.பிக்களே கிடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பாஜக 241 தொகுதிகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 98, சமாஜ்வாடிக் கட்சி இந்த முறை 37 தொகுதிகளை அள்ளியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் திரினமூல் காங்கிரஸ் 29 இடங்களுடன் இருக்கிறது. இதைத் தொடர்ந்து திமுக 22 தொகுதிகளுடன் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளிலேயே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}