பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை.. சபாஷ் நடவடிக்கை!

Oct 27, 2024,07:17 PM IST

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை போல, பெசன்ட் நகர் கடற்கரையிலும் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சென்னை மெரீனா கடற்கரை, உலகிலேயே மிகவும் நீளமான 2வது பெரிய கடற்கரை. இந்த கடற்கரையில் நடந்து சென்று கடலில் கால் நனைப்பது பலருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்தக் கனவை கடந்த அதிமுக ஆட்சியில் நனவாக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தை தற்போதைய திமுக அரசு நனவாக்கி மாற்றுத் திறனாளிகளின் மனதில் பால் வார்த்தது.




தற்போது இந்தத் திட்டத்தை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் விரிவுபடுத்துகிறது திமுக அரசு. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.  அந்த மரப்பாதை வழியாக  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினாவில் தினசரி கடற்கரை வரை சென்று கடல் அலையில் கால் நனைத்து மகிழ்கின்றனர்.


இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை அமைக்க நம் முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.


அதன்பேரில், ரூ.1.61 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.




மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திருவான்மியூர் மற்றும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை அமைக்க, நம் அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


பாராட்டுக்குரிய நடவடிக்கை.. மாற்றுத்திறனாளிகள் மனம் மகிழ, தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிகம் வரும் கடற்கரைகளில் இதைப் போன்ற மரப் பாதையை அமைத்தால் மாற்றுத் திறனாளிகள் நிச்சயம் மகிழ்வார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்