DMK war room: மொத்தம் 51 பேர்.. லோக்சபா தேர்தல் போருக்கு... விறுவிறுப்பாக தயாராகும் திமுக!

Feb 11, 2024,01:05 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வார் ரூமை அமைத்துள்ளது திமுக. மொத்தம் 51 பேர் இந்த வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர்.


நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன.  அந்த வகையில் திமுக வார் ரூம்களை அமைத்துள்ளது. தொகுதிப் பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு பூத் கமிட்டி மேலாண்மை, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை கட்சியின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கவனிப்பார். 


ஊடக விவாதக் குழு மேலாண்மை, நட்சத்திரப் பேச்சாளர்கள் மேலாண்மை ஆகியவற்றை துணை அமைப்புச்செயலாளர் எஸ். ஆஸ்டின் பார்த்துக் கொள்வார். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி வசம் ஒப்படைக்கப்படுகிறது.




தலைமைத் தேர்தல் குழு தேர்தல் பணி வழக்கறிஞர்கள் குழுவையும் திமுக அறிவித்துள்ளது. 


தேர்தல் வழக்குகளுக்கான நீதிமன்ற குழு - வழக்கறிஞர்கள் ஆர். சண்முகசுந்தரம், ஆர் விடுதலை, பி வில்சன்.


தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தேர்தல் ஆணையம் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளுக்கான குழுவில் வழக்கறிஞர்கள் ஆ சரவணன், ஜே பச்சையப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


காவல் துறை புகார்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவில் வழக்கறிஞர்கள் அஸ்வின் பிரசன்னா, அர்ஜுன் இடம் பெற்றுள்ளனர்.


மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இ பரந்தாமன், கே எஸ் ரவிச்சந்திரன், கரூர் மணிராஜ், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே சந்துரு, சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுதவிர 33 வழக்கறிஞர்களும் வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தலைமைக் கழக வார் ரூம் அலுவலகத்திற்கான தொடர்பு எண்ணாக 08069446900 அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்