விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 1.. காங்கிரஸ் மட்டும் பாக்கி.. இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதிப் பங்கீடு

Mar 08, 2024,12:51 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வேகமாக நிறைவுக் கட்டத்தை நெருங்கி விட்டது.  இன்று மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும்2 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. 


இதில் முதல் ஆளாக இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து கொமதேகவுக்கு நாமக்கல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.




இந்த நிலையில் இன்று மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர். கடந்த தேர்தலில் ஈரோட்டை மதிமுக பெற்று போட்டியிட்டு வென்றது. இந்த முறை அந்தக் கட்சிக்கு திருச்சிராப்பள்ளி தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அத்தொகுதியில் துரை வைகோ போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2


இதைத் தொடரந்து தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டது. கடந்த முறை போட்டியிட்டு வென்ற அதே சிதம்பரம் தனி, விழுப்புரம் தனி தொகுதிகள் விசிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில்  விசிக தலைவர் தொல். திருமாவளவனும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.


திமுக கூட்டணியில் மிச்சம் இருப்பது காங்கிரஸ் மட்டுமே. அனேகமாக நாளை காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்