திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Jul 22, 2024,05:53 PM IST

சென்னை:   2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, கே.என். நேரு, பொன்முடி எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.




2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்  5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும் தமிழக முதல்வரும் ஆன மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே. என். நேருவும், அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதியும், அமைச்சர்கள் எ வ வேலு, தங்கம் தென்னரசு, இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


இந்த குழுவில் உள்ளவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அத்துடன் நேற்று மாலை ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது எனபது குறித்தும், கட்சியினர் மேற்கோள்ள வேண்டிய அடுத்த கட்ட மாற்றங்கள் என்னன்ன என்றும், அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த மாவட்டங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 


சமூக வலைத்தளங்களில் கட்சிமுக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவை வலுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்