மும்மொழிக் கொள்கையை எதிர்த்து.. நாளை திமுக கூட்டணி சார்பில்.. கண்டன ஆர்ப்பாட்டம்!

Feb 17, 2025,06:30 PM IST

சென்னை: மும்மொழி கொள்கையை எதிர்த்தும்,மத்திய அரசை கண்டித்தும் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு  அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கை எனப்படும் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து, இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை.


இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்திற்கு சேர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மத்திய  கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி என கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.




மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 

அதேபோல் காங்கிரஸ், அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும்,  மத்திய அரசை கண்டித்தும் நாளை அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மநீம, மதிமுக, கொமதேக, தவாக உள்ளிட்ட  கட்சிகள் பங்கேற்கின்றனர்.


தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம். அதை உணர்த்துவோம் என்றும் ஒன்றிணைவோம் உரக்க குரல் எழுப்புவோம். உரிமைகளை மீட்போம் என கூட்டணிக் கட்சிகள் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்