சூடு பிடிக்கும் அரசியல் களம்.. வேட்பாளர் நேர்காணலில் குதித்த திமுக, அதிமுக.. களை கட்டும் தேர்தல்!

Mar 10, 2024,06:43 PM IST

சென்னை:  அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுகவில் இன்று வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணி இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.


நாடாளுமன்றத் தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் இறங்கியுள்ளன.



திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி நேற்று தன்னுடைய தொகுதி பங்கீட்டை சிறப்பாக முடித்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்ற இறுதி வடிவம் நேற்று முழுமை பெற்றது. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களை அது பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று அதிமுக தரப்பில் வேட்பாளர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு நேர்காணல் நடத்துகிறது. இன்றும் நாளையும் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.


திமுகவை பொருத்தவரை இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக இன்று காலை முதல் நேர்காணலை திமுக நடத்தி வருகிறது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி, தொகுதியில் உங்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? எவ்வளவு செலவு செய்ய முடியும், என்ன மாதிரியான வாய்ப்புகள் தொகுதியில் உள்ளன என்பது குறித்த விவரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களிடம் கேட்டு வருகிறார்.


மறுபக்கம் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வருபவருமான  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி வேட்பாளர்களிடமிருந்து இன்று விருப்ப மனுக்களை பெறுகிறது. இந்த அணியானது பாஜகவில் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த அணிக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் தங்கள் சுய சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் ஓபிஎஸ் அணி தெரிவித்துள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த நிலையில் தான் இன்று முதல் விருப்ப மனுக்களை ஓபிஎஸ் அணி பெற்று வருகிறது. 


இப்படி தலைநகர் சென்னையில் தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் மற்ற கட்சிகளும் தங்களது பணிகளை விரைவுபடுத்தி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்