வேட்பு மனு தாக்கல்.. சரமாரியாக குவிந்த வேட்பாளர்கள்.. திக்குமுக்காடிப் போன தேர்தல் அலுவலகங்கள்!

Mar 25, 2024,10:46 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று சூடு பிடித்தது. பங்குனி உத்திரம் இன்று என்பதால், அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இன்று மனுத் தாக்கல் செய்ய குவிந்து விட்டனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் திக்குமுக்காடிப் போய் விட்டன.


மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது.  27ம் தேதி கடைசி நாளாகும். தற்போது வரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 




இன்று முதல் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். முக்கிய வேட்பாளர்கள் வருகை தருவதால், தமிழகம் முழுவதும் மனுதாக்கல் செய்யும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலைமைகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


இதே போல மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்கள் அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு இன்றுடன் இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. கடைசித் தேதி நெருங்குவதால் வரும் நாட்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பங்குனி உத்திரம் விசேஷ நாள்  என்பதால் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்து விட்டனர்.


டிஆர் பாலு, தமிழிசை மனு தாக்கல்


அதிமுக வேட்பாளர்கள் கூண்டோடு இன்று  வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர திமுக சார்பில் டிஆர்.பாலு, கதிர் ஆனந்த், டாக்டர் கலாநிதி வீராசாமி, மதிமுகவின் துரை வைகோ, பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் என ஏகப்பட்ட ஸ்டார் வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். வட சென்னை வேட்பு மனு தாக்கலின்போது அதிமுக தரப்புக்கும், திமுக தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்