சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீர்கள், தவறான தகவல்களை நம்பாதீர்கள் என்று அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தேமுதிக தலைமை மறுத்தது. வழக்கமான உடல் நல பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அது தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வரும் சூழ்நிலையில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று காட்டுத் தீ போல் பரவியது. விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதை தற்போது தேமுதிக மறுத்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் யாரும், பரப்பவும் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் விரைவில் குணம் பெற தேமுதிகவினர் வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிரம் நலம் பெற்று பழைய சிங்கமாக வாங்க கேப்டன்.. தமிழ்நாடு உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது.. மீண்டும் வாங்க!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}