சென்னை: அதிமுக பாஜக கூட்டணி குறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்கு எங்களது கட்சி பற்றி மட்டுமே யோசிப்போம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் இந்த முறை நன்கு யோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைப் பொறுத்த வரைக்கும் எங்களோடு கட்சி வளர்ச்சி, எங்கள் கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் இப்போது முழுமூச்சாக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம். எனவே,வருகின்ற முப்பதாம் தேதி தர்மபுரியில் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்த இருக்கிறோம். பிறகு யார் யாருக்கெல்லாம் முக்கிய பதவிகள் என்பது குறித்து அன்று அறிவிக்கப்படும். அதன் பிறகு என்னென்னெல்லாம் முக்கிய செய்திகள் அறிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் செயற்குழு பொதுக்குழு கூட்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு அடுத்தெல்லாம் நாங்கள் என்ன அறிவிக்கின்றோமோ அதற்கான பணிகளை தொடர்ந்து செய்ய இருக்கிறோம்.
எனவே, ஆறு மாத காலத்திற்கு தேமுதிக பொருத்தவரைக்கும் எங்கள் கட்சி வளர்ச்சி, எங்கள் கட்சி பணிகள், பூத் கமிட்டி அமைப்பது, தமிழகம் முழுவதும் இருக்கின்ற எங்கள் தொண்டர்கள் சந்திப்பது, இது மாதிரியான எங்கள் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அதனால் நீங்கள் நினைக்கிற மாதிரி உங்களுடைய யூகங்களுக்கோ உங்களுடைய கற்பனைகளுக்கோ தேமுதிக கிடையாது. அதை நான் உறுதியாக சொல்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்று நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சட்டசபை தேர்தல் வருவதற்கு ஒரு வருடம் இருக்கிறது. அதனால் நாங்கள் இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம். ஆறு மாதம் எங்கள் கட்சி வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக உங்களிடம் சொல்கிறோம்.
பாஜக தலைவர்களும் அதிமுக அண்ணன் எடப்பாடியார் அவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டிய கேள்வியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திடம் கேட்பது சரியாக இருக்காது. ஏனெனில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது அதிமுக பாஜக மட்டுமே. பேசினது அவங்க இருவரும் மட்டும்தான். அவர்கள் என்ன பேசினார்கள் என்று நம்மை யாருக்கும் தெரியாது. அதனால் யூகங்களின் அடிப்படையில் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் பார்லிமென்ட் எலெக்ஷனில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால் இப்பொழுது இன்னும் ஒரு வருடம் தேர்தலுக்கு இருக்கிறது. நான் நிச்சயமாக எங்கள் கட்சி வளர்ச்சி எங்கள் கட்சிப் பணியை மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். எந்த கட்சிக்குப் போகிறோம்.. யார் கூட்டணிக்கு போகிறோம்.. அப்படியெல்லாம் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதனால் எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை. நாங்களும் யாரிடமும் பேசவும் இல்லை. கூட்டணியில் இருக்கிறோமா அல்லது தனியாக போட்டியிடப் போறோமா என்பது குறித்து செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்த பிறகு தெரியவரும்.
ஏதோ இரட்டை இலக்கு பேசப்பட்டு இருக்கிறது. நீங்கள் எல்லாம் போடுகிறீர்கள் என்று செய்திகள் பரவுகிறது.
தயவுசெய்து ஊடக நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தவறான செய்தியை உங்கள் யூகங்களின் அடிப்படையில் பரப்பாதீர்கள். தேமுதிக தலைமை கழகத்தில் அறிவிக்கும் செய்தி மட்டுமே உண்மை செய்தி. நீங்கள் உங்களுடைய குழப்பத்திற்கோ, யூகங்களுக்கோ தேமுதிக இன்றைக்கு எத்தனை சீட்டு பேசி இருக்காங்க என்றெல்லாம் தவறான செய்தியை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்பதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். நாங்கள் முடிவு எடுத்தால் கண்டிப்பாக உங்கள் எல்லாம் அழைத்து உங்கள் முன்னாடி தான் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்பதை உங்கள் முன் கூறுகிறேன்.
பாஜகவிற்கு புதிதாக ஒரு தலைவர் வந்தால் அதற்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவிற்கு தேமுதிகவின் கருத்து ஒன்றுமில்லை.
திமுகவை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களே பொன்முடி விவகாரத்தில் ஸ்ட்ராங்கான முடிவெடுத்து அவருடைய பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் அதனால் அவர்களுடைய கட்சி அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. மிகவும் கொச்சையான வார்த்தைகள். அசிங்கமான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு அரசியல் நகரும் ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒவ்வொருத்தருடைய கருத்துக்களும் ஒவ்வொன்றாக இருக்கும்.
அந்தக் கருத்துகளுக்கெல்லாம் எங்களுடைய கருத்தை நீங்கள் கேட்பது சரியில்லை. எங்கள் கருத்து தேமுதிக உடைய கருத்திற்கு என்ன கேள்விகள் வேணாலும் கேளுங்கள் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் குழப்பத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாமகவில் அப்பா பையனுக்கு சண்டை. திமுகவில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இன்றைக்கு பாஜகவில் ஒரு குழப்பம் இருக்கிறது; புதிய தலைவர் வந்திருக்கிறார். இதே போல் அதிமுகவில் ஏற்கனவே இருந்த பிளவுகள் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் தேமுதிக நாங்கள் உறுதியாக எடுத்துகின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் யோசித்து தெளிவாக எங்களுக்கு கட்சியினுடைய வளர்ச்சியில் மட்டுமே நாங்க கவனம் செலுத்தி போய்கிட்டு இருக்கிறோம்.அதற்கு பத்திரிகையாளர்களான நீங்களும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும். தவறான செய்திகளை யூகங்களின் அடிப்படையில் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறியுள்ளார்.
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!
என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா
பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்
அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!
{{comments.comment}}