தனித்துப் போட்டி, 14+1 எல்லாம் ஓகே.. தேமுதிக மா.செக்களின் ஒரிஜினல் மன விருப்பம் இதுதானாம்!

Feb 07, 2024,06:24 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேமுதிகவின் தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கை குறித்து கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெளிவுபடுத்தி விட்டார். இன்று காலை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்போது பெரும்பாலானவர்கள் அதிமுக கூட்டணியை வலியுறுத்தியதுதான் பிரேமலதாவை ஆச்சரியப்படுத்தி விட்டதாம்.


கிட்டத்தட்ட ஒருமித்த குரலில் அத்தனை பேருமே அதிமுகவைத்தான் முதல் சாய்ஸாக கூறியுள்ளனராம்.


விஜயகாந்தின் மறைவிற்கு பின்னர் இன்று தேமுதிகவின் முதல் அரசியல் நிகழ்வாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த்திற்கு வழங்கி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்.




அதன் பின்னர் நாடாருமன்ற தேர்தல் குறித்து எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மாவட்டச் செயலாளர்கள் அவரவர் கருத்தை முன்வைத்துப் பேசியுள்ளனர்.  அப்போது பெரும்பாலான உறுப்பினர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று கூறியுள்ளனர். இது பிரேமலதாவுக்கே ஆச்சரியமாகி விட்டதாம். இத்தனை பேர் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்களே என்று வியந்து போய் விட்டாராம்.


அதிமுக கூட்டணியை மா.செக்கள் வலியுறுத்த சில முக்கியக் காரணங்கள் உள்ளன.  அதிமுகவில் கூட்டணி சேர்ந்த பிறகுதான் தேமுதிகவுக்கு அரசியல் ரீதியாக மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு பிரிந்து வந்த பிறகு பெரும் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறோம். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் 2026 சட்டசபை தேர்தலையும் கருத்தில் கொள்ள  வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சட்டசபைத் தேர்தலுக்கு  நமக்கு அதிமுகதான் பொருத்தமாக இருக்கும். எனவே அதையும் மனதில் வைத்து இப்போதே அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட்டால், நிச்சயம், சட்டசபைத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற அதிமுகவினர் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


தொகுதி பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் நமக்கு தேவையானதை கேட்டு பெற வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் பலர் வலியுறுத்தியுள்ளனர். ஒரு வேளை கூட்டணிதான் வைக்க வேண்டும் என்றால் அதிக சீட்டுகளைப் பெற வேண்டும் என்று மா.செக்கள் கூறியுள்ளனர்.  பாஜகவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த ஆலோசனைக்குப் பின்னர்தான் நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள், 1 மாநிலங்களவை எம்.பி பதவியை யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.


மாறி மாறி பேச்சுவார்த்தை


இந்தநிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷூடன்  அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மற்றொருபுறம் பாஜகவுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரேமலதா கேட்ட சீட்டுகளை இருவரில் யார் தருவார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விஜயகாந்த் மறைவால் அனுதாப ஓட்டுகளை தேமுதிக பெற வாய்ப்புள்ளது என்பதால் இந்த 2 கட்சிகளும் தேமுதிக கேட்ட சீட்டுகளை தர முன் வரும் என்று தெரிகிறது.  எப்படி இருந்தாலும் யாருடன் கூட்டணி என்ற முடிவை பிரேமலதா தான் முடிவு செய்வார் என்பது உறுதி.  விரைவில் இதுகுறித்து தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்