சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக தங்கள் கூட்டணி கட்சியோடு முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் மற்ற பிரதான கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
ஆனால், அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையே உள்ளது. 14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுத்தால் கூட்டணி என அறிவித்திருந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. ஆனால் திடீர் என தாம் அப்படி சொல்லவே இல்லை எனவும் பல்டி அடித்தார் பிரேமலதா. இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக தங்களால் இத்தனை தொகுதி தரமுடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தேமுதிக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது.
இந்நிலையில்,தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என அக்காட்சி மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். சீட் விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியை மா.செக்கள் வலியுறுத்த சில முக்கியக் காரணங்கள் உள்ளன. அதிமுகவில் கூட்டணி சேர்ந்த பிறகுதான் தேமுதிகவுக்கு அரசியல் ரீதியாக மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு பிரிந்து வந்த பிறகு பெரும் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறோம். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் 2026 சட்டசபை தேர்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு நமக்கு அதிமுக தான் பொருத்தமாக இருக்கும். எனவே அதையும் மனதில் வைத்து இப்போதே அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட்டால், நிச்சயம், சட்டசபைத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற அதிமுகவினர் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் என்ன செய்ய போகிறார். மா.செ.க்கள் பேச்சுக்கு இடம் அளிப்பாரா?... அல்லது சீட்டு விவகாரத்தில் பிடிவாதம் காட்டுவாரா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}