நம்ம பிள்ளையை ஜெயிக்க வைங்க.. கணவர் விஜயகாந்த் நினைவிடத்தில் .. தியானத்தில் உட்கார்ந்த பிரேமலதா!

Jun 04, 2024,04:15 PM IST

சென்னை:  மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில்  தியானத்தில் அமர்ந்தார் கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.


18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிகி வருகின்றன. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ்  கூட்டணி கட்சிகள் 228 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள்  முன்னிலை வகித்து வருகிறது. 




இந்த நிலையில்,  விஜபி தொகுதியான விருதுநகரில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், திமுக சார்பில்  மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் ஒட்டுகள் பிரிந்து மும்முனை போட்டிகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்தார். 


வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். அதன் பின் பின்னடைவு, முன்னிலை என மாறி மாறி வருவதால், தேமுதிகவினர் கலக்கம் அடைந்தனர்.   தற்பொழுது விருதுநகர் தொகுதியில் 2 முனை போட்டி மட்டுமே நிலவி வருகிறது. வெற்றி பெற போதுவது யார்? திமுகவா? தேமுதிக? என்ற இழுபறி நிலை உருவாகி வருகிறது.




இந்த நிலையில், விருதுநகரில்  7வது சுற்று முடிவில் தேமுதிக கட்சி விஜய பிரபாகரன் 1,36,198 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மாணிக்கம் தாக்கூர் 1,35,479 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் 466 வாக்குகள் வித்தயாசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் விஜயபிரபாகரனின் தாய் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியில் உட்கார்ந்து தியானம் செய்து வருகிறார். மகன் பெற்றி பெற வேண்டும் என்பதற்காக தியானத்தில் இறங்கியிருப்பதால் அவருடன் கட்சியினரும் அமர்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்