Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

Oct 29, 2024,06:44 PM IST

சென்னை: தீபாவளியை முன்னிட்டு,  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது அரசு அலுவலகங்கள், ஆகியவற்றிற்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு  என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.




இதனால் மக்கள் தீபாவளியை  கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தின நாள் அரசு விடுமுறை என மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு  பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் வரை மட்டுமே செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை  என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்