"பணம் கையில் வந்தால்தான் நிஜம்" .. என்ன இப்படி சொல்லிட்டாரு செல்வராகவன்!

Mar 08, 2023,07:04 PM IST

சென்னை: "பணம் கையில் வந்தால்தான் நிஜம்" என திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ள நிலையில் தற்போது இந்த ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தமிழ் சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் செல்வராகவன்.




குறிப்பாக 2006 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் அப்போதைய ரசிகர்களால்  பெருமளவில் ரசிக்கப்படவில்லை. ஆனால் புதுப்பேட்டை வெளியாகி 10 வருடம் கழித்து இப்படம் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல படத்தில் உள்ள ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர். குறிப்பாக சொல்லவேண்டுமானால் படத்தில் வரும் காட்சிகள் மற்றும் படத்தின் பிஜிஎம் பலரின் ஃபேவரைட்டாக மாறியது.


பல வருடம் கழித்து செல்வராகவனின் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சில ரசிகர்கள் செல்வராகவன் இயக்கிய படத்தை "இப்போ பாத்தா புரியாது போக போக நல்லா இருக்கும்" என்ற கருத்தையும் வைக்கின்றனர்.


இப்படியாக செல்வராகவனின் படத்திற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்ற நிலையில் தற்போது இவர் நடிப்பில் முழுக்கவனம் செலுத்து வருகிறார். இவர் இறுதியாக இயக்கிய படம் 'நானே வருவேன்'. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் இயக்குவதில் இருந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்ட செல்வராகவ���் நடிப்பில் அசால்ட் செய்து வருகிறார்.


சமீபத்தில் செல்வராகவனின் எதார்த்தமான நடிப்பில் வெளியான 'பகாசூரன்' திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தனது எதார்த்தமான நடிப்பு மட்டுமல்லாமல் இவர் போடும் ட்விட் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ட்விட்டரில் பெரியளவில் ஆக்ட்டிவாக இல்லாமல் இருந்த செல்வராகவன் சமீபகாலமாக வாழ்க்கையின்  தத்துவங்களை அள்ளி தெளித்து வருகிறார். 


"தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும். இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள்" இப்படியெல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவங்களை ட்விட் செய்துள்ளார். நண்பர்களே எனக்கு இல்லை என்ற செல்வராகவனின் ட்விட் சமூகவலைத்தளங்களில் மிக பெரிய அளவில் பேசுருளாகியது. 


இப்படியாக தத்துவங்களை தெளித்து வரும் செல்வராகவன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு தத்துவத்தை ட்விட் செய்துள்ளார். அதில், பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்! அனுபவம். தத்துவம் அல்ல! என ட்விட் செய்துள்ளார். 


இறுதியாக செல்வராகவன் அனுபவம், தத்துவம் அல்ல என ட்விட் செய்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படியாக தத்துவங்களை ட்விட் செய்து வரும் செல்வராகவனை ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரித்தாலும், மறுபக்கம் "தலைவனுக்கு என்னாச்சு" என்று குழம்பிபோயுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்