Pushpa 2: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது.. ராஜமெளலி

Nov 18, 2024,03:26 PM IST

சென்னை: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று  புஷ்பா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.


சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உருவாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலில் சாதனை பெற்றது. பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற  தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.




மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியது. புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகியது. இந்த டிரெயிலர் வெளியான 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.


பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 குறித்து இயக்குனர் ராஜமவுலி, பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்