கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.. எல்லோருமே கூத்தாடிகள்தான்.. இயக்குநர் பேரரசு பொளேர்!

Dec 10, 2024,02:03 PM IST

சென்னை: அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான்.  அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார் இயக்குநர் பேரரசு.


எக்ஸ்டிரீம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்தார் பேரரசு. இயக்குநர் பேரரசு பேசியதாவது:




இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள்.


ரக்‌ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்‌ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா  தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது.


அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். 


கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!

news

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!

news

அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக விஜய்

news

Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!

news

புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்