சாதிய வன்கொடுமைகளை தடுக்க.. என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்.. இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி

Feb 15, 2025,05:40 PM IST

சென்னை:  சாதிய வன்கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இயக்குனர் பா ரஞ்சித்  கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முதல்வர் மு க ஸ்டாலின் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட  பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதனை  வீடியோ பதிவேற்றம் செய்து வெளியிட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், தலைவர் என்றும், முதல்வர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர் என்றும் அழைக்கிறார்கள்.




இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டு, மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான முதல்வரின் பதில்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது .


தமிழ் சினிமாவில் அட்டகத்தி மெட்ராஸ் கபாலி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பா ரஞ்சித் முதல்வர் பேசிய இந்த வீடியோவை  தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டு, சாதிய கொடுமைகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:


தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் அவர்களே..


தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்