Awareness: "எங்கெல்லாம் தொடக் கூடாது".. மகளுடன் இணைந்து விளக்கிய இயக்குநர் மோகன் ஜி!

Mar 07, 2024,05:53 PM IST

சென்னை: புதுச்சேரி பள்ளி மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை போல் இனிமேல் எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது. இது குறித்து இயக்குனர் மோகன் ஜி தனது மகள் மேதினியாழ் வர்மனுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


2016ம் ஆண்டு வெளிவந்த பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியவர் மோகன் ஜி. இவரது முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இவரது 2வது திரைப்படம் திரெளபதி நல்ல வசூல் சாதனையை பெற்றது. இதற்கடுத்து ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். 


இவரது படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது பாணியிலேயே இயக்கி வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தை போல் இனிமேல் எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது என்பதற்காக, தனது மகள் மேதினியாழ் வர்மனுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். 




அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:


எல்லாருக்கும்  வணக்கம், நேற்று புதுச்சேரி பாப்பாவுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். எந்த பெற்றோர்களுக்கும் நடக்க கூடாத கொடுமை அது. நம்ம அந்த இடத்தில் இருந்து யோசிச்சு பார்க்கவே அடி வயிறு எல்லாம் கலங்குது. அந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். 


ஒரு சில பெரிய ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்களுக்கு எல்லாம் குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லி கொடுத்துருவாங்க. நடுத்தரமா இருக்கிற வீட்டிலேயும், வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற வீட்டிலேயும் இதெல்லாம் சொல்லி கொடுக்க மாட்டார்கள். வெளுத்ததெல்லாம் பால்னு  எல்லாரையும் நம்புவாங்க. அக்கம் பக்கத்தில் இருக்கிற எல்லாரையும் நம்புவாங்க. அவங்களை நம்பி  குழந்தைகளை அனுப்புவாங்க. 


குழந்தைகளுக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்து தான் அனுப்பனும். யாரையும் நம்பக் கூடாத  சூழ்நிலையில் வாழ்கிறோம். (பேசிக் கொண்டே ..  பேட் டச் என்றால் என்ன என்று தனது மகளிடம் கேள்வி கேட்கிறார் மோகன் ஜி). 


மேதினியாழ்:  பேட் டச்சுனா.. "சின்"னுல தொடக்கூடாது, "பம்"முல தொடக்கூடாது, "லிப்ஸ்"ல தொடக்கூடாது.


மோகன் ஜி:  வேறு எங்கெல்லாம் தொடக்கூடாது.


மேதினியாழ்: எங்கேயுமே தொடக்கூடாது.


மோகன் ஜி: அப்படி தொட்டா என்ன பண்ணனும்?


மேதினியாழ்: அடிக்கனும், கிள்ளனும், ஒதைக்கனும், அப்பா, அம்மாகிட்ட சொல்லனும்.


மோகன் ஜி: வேறு யாருகிட்ட சொல்லனும்?


மேதினியாழ்: ஆயா கிட்ட, டீச்சர் கிட்ட சொல்லணும்.


மோகன் ஜி: யாராவது தெரியாதவங்க எதாவது வாங்கி கொடுத்தா சாப்பிடலாமா?


மேதினியாழ்: சாப்பிடக்கூடாது

 

மோகன் ஜி: எது எல்லாம் வாங்கி கொடுத்தால் சாப்பிடக்கூடாது


மேதினியாழ்: ஐஸ் கிரீம், சாக்லெட், பஞ்சு மிட்டாய்


மோகன் ஜி: அப்படி வாங்கி கொடுத்தா என்ன செய்யனும்


மேதினியாழ்: சாப்பிடக் கூடாது


மோகன் ஜி: தெரிஞ்சவங்க வாங்கி கொடுத்தா என்ன செய்யனும் 


மேதினியாழ்: அம்மா, அப்பா கிட்ட சொல்லிட்டு சாப்பிடனும்


மோகன் ஜி : அம்மா, அப்பாக்கு தெரியாம சாப்பிடலாமா?


மேதினியாழ்: சாப்பிடக்கூடாது 


மோகன் ஜி: அப்பா அம்மாக்கு தெரியாமா எங்காயாவது போகலாமா?


மேதினியாழ் : போகக்கூடாது 


மோகன் ஜி: போனா என்னாகும்?


மேதினியாழ்: திருடர்கள் கடத்திட்டு போயிடு வாங்க


மோகன் ஜி: ஸோ, அப்பா அம்மாக்கு தெரியாம எங்கயும் போகக்கூடாது. வீட்டுல இருக்குறவங்க கூட தான்  போகனும். இந்த மாதிரி நம்ம குழந்தைகளுக்கு ப்ரி டைம் கிடைக்கும் போது சொல்லி கொடுக்கனும். சட்டத்திலேயும் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இந்த மாதிரி கொடுரமான சம்பவத்தின் போது, கொடுரமான தண்டனைகள் கொடுக்க வேண்டும். அவங்களுக்கு பயத்த கொண்டு வரனும். சட்டத்துல சில மாற்றங்களை கொண்டு வரனும் என்று கூறியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்