தூத்துக்குடி: இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் மாரிமுத்து என்பவருக்கு ஜஸட் 30 வயதுதான். இந்த வயதில் அவர் மரணத்தைத் தழுவியுள்ளார்.
இவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக புகை பிடிக்கம் பழக்கத்தை இவர் கொண்டிருந்ததுதான் என்று சொல்கிறார்கள். நெஞ்சு வலி ஏற்பட்டும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புலியங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இயக்குநர் மாரி செல்வராஜிடம், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், 5 வயதேயான மகனும் உள்ளனர். மாரிமுத்துவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். அதிக அளவில் சிகரெட் பிடிப்பாராம். இதுதான் இவரது உடல் நலம் கெட காரணம் என்று சொல்கிறார்கள்.
மாரிமுத்துவின் மரணம் ஒரு துளிதான்.. எத்தனையோ பேர் இந்த புகை பிடிக்கும் பழக்கத்திற்கும், மதுவுக்கும் அடிமையாகி உடலையும், வாழ்க்கையையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு பழக்கத்தாலும் ஒரு பர்சன்ட் கூட நமக்கும் பலன் இல்லை.. நம்மைச் சார்ந்தோருக்கும் பலன் இல்லை. இரண்டுமே உயிர்க் கொல்லிகள்.. இழுக்க இழுக்க இன்பம் எல்லாம் கிடையாது.. ஒவ்வொரு இழுப்பிலும் உங்களது வாழ்நாளை நீங்கள் இழந்து கொண்டு வருகிறீர்கள் என்பதே நிஜம்.
சின்னச் சின்ன பையன் முதல் வயதானவர்கள் வரை இன்று புகை பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள்.. செய்யாதே என்று சொன்னாலும் கேட்பதில்லை.. உங்களிடம் இந்தப் பழக்கம் இருந்தா விட்ருங்க.. இல்லாட்டி செத்துருவீங்க பாஸ்.. அவ்வளவுதான்!
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}