"சோசியல் மீடியாவுக்கு பிரேக்.. போன் கூட பண்ணாதீங்க.. எடுக்க மாட்டேன்".. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

Dec 16, 2023,06:53 PM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவுக்கு பிரேக் விடுவதாக அறிவித்துள்ளார். தனது புதிய படத்தில் கவனம் செலுத்தப் போவதால் இந்த பிரேக் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியிலிருந்து மீண்டு, தனது சொந்த படக் கம்பெனியை சமீபத்திதல்தான்  அறிவித்தார். ஜி ஸ்குவாட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக  பிளைட் கிளப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. உறியடி நாயகன்  விஜயக்குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.


இந்த நிலையில் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்துக்குத் தயாராகவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான பூர்வாங்க வேலைகளில் அவர் ஈடுபடவுள்ளார். ஸ்கிரிப்ட் ரெடி செய்வது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்ததத் திட்டமிட்டுள்ளார்.




சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என்று பிரமாண்ட வெற்றிகளைக் கொடுத்து விட்ட லோகேஷ் கனகராஜ், ரஜினி படத்தை மிகப் பிரமாண்டமான வெற்றியாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார். இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே வசூல் மற்றும் ஆக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இது இருக்கும் என்றும் எல்லோரும் நம்புகிறார்கள்.


இந்த நிலையில் தனது புதிய படத்தின் வேலைகளுக்காக சோசியல் மீடியாவிலிருந்து விலகி இருக்கப் போவதாகவும், போன் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதுவரை என் மீது காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் சந்திக்கலாம். அதுவரை அனைவரும் நேர்மறையான உணர்வுகளைப் பரப்புங்கள், பகிருங்கள் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்