நான் முழுமையான படைப்பாளி இல்லை.. என்ன ஹரி இப்படி பளிச்சுன்னு சொல்லிட்டாரு!

Apr 27, 2024,03:05 PM IST

சென்னை: ரத்னம் படம் இருவிதமான விமர்சனங்களுடன் தியேட்டர்களைக் கலக்கி வரும் நிலையில் இயக்குநர் ஹரி, தன்னை முழுமையா படைப்பாளி இல்லை என்று கூறி எதார்த்தமாக பேசியுள்ளார். 


ஹரி இயக்கத்தில்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் செளத் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ரத்னம். இதில், நடிகர் விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ஹரியும், விஷாலும் 3வது முறையாக இணைந்துள்ளனர். இதற்கு முன்பு தாமிரபரணி, பூஜை என இரு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.


மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள படம் இது. ஹரியின் பேவரைட் இசையமைப்பாளரான  தேவிஸ்ரீ பிரசாத்தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.




இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரத்னம் என்ற பெயருக்குப் பதில் ரத்தம் என்று வைத்திருக்கலாம். அந்த அளவுக்கு ரணகளமாக இருக்கிறது. ஆனாலும் ஹரி ஸ்டைல் படம் என்பதால் ரசித்துப் பார்க்க முடிவதாக பலரும் கூறியுள்ளனர். இந்நிலையில்,  இயக்குனர் ஹரி மனம் திறந்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


எதையுமே அதுவா தோணுச்சுன்னாதான் செய்யனும். நம்மளா வாலண்டியரா செய்யக்கூடாது. நான் எங்கேயும் என்னை முழு நேரப் படைப்பாளி என அடையாளப்படுத்தியது கிடையாது. நான் செமி கிரியேட்டர் தான். பாதி என்னுடைய படைப்பு. மீதி எல்லாமே சமாளிபிகேஷசன் தான். 


ஒரு நல்ல நடிகர், நடிகை, காமெடியனை வைத்து செய்வது தான் அந்த சமாளிபிகேஷன். கொஞ்சம் படித்துவிட்டு 60 மார்க் வாங்கும் சுமாரான மாணவன் நான். 100 மார்க் வாங்க வேண்டுமென நினைத்ததில்லை.  60 மார்க் வாங்கினால் போதுமென நினைப்பவன். எனக்கு என்னுடைய சக்தி தெரியும். இவ்வளவு தான். இதை  ஒழுங்க செஞ்சா போதும்.  50 மார்க்கு வாங்குன பையன் 58 மார்க் வாங்குனா வீட்டுல பாராட்டு வாங்க. அதுனால இது போதும்னு நான் முடிவு பண்ணிட்டேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்