ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு.. டெல்லியில்  ‌இயக்குனர் அமீர்.. இன்று விசாரணை!

Apr 02, 2024,12:14 PM IST

டெல்லி:  போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர்  டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படும் ரசாயன பொருட்களை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும். 


இது தொடர்பான விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை  டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இதில்  மூளையாக செயல்பட்டது திமுகவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடத்தப்பட்ட இந்த  போதைப் பொருட்களை இவர் ஆஸ்ரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவானார். விமான நிலையங்களில் தீவிர சோதனையும், லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாபர்  சாதிக் வீட்டில் தொடர் சோதனை நடத்தி அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.





மேலும் அவருக்கு வேறு எந்த அமைப்பினருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த ஆய்வில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்  களமிறங்கினர். இந்த நிலையில், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கு இவரிடம் தொடர் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினார். இதை அடுத்து இவரை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைத்தனர்.


போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில்  இயக்குனர் அமீர் உட்பட மூவர் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராகும் படி டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர்,அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய மூவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.


என்னை எப்போது அழைத்தாலும் உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என சமீபத்தில் இயக்குனர் அமீர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்