"நாங்கள் என்ன இளிச்சவாயர்களா".. கூட்டணி முறிய காரணம் இதுதான்.. திண்டுக்கல் சீனிவாசன் பரபர பேச்சு!

Jan 30, 2024,10:10 PM IST

திண்டுக்கல்: அண்ணாமலைதான் வருங்கால முதல்வர் என்று பாஜகவினர் சொல்லி வந்தனர். அதை ஏற்க நாம் என்ன இளிச்சவாயர்களா.. இதனால்தான் ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரிடம் புகார் கூறி விட்டு கூட்டணியை விட்டு தைரியமாக வெளியே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.


திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டியில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, அதிமுக - பாஜக கூட்டணி முறிய என்ன காரணம் என்பது குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டார். இது அதிமுக, பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.


திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சிலிருந்து:




முதல்வர் பதவியை வகிக்க எடப்பாடியாருக்கு  முழுத் தகுதி உண்டு என்று நாம் சொல்லி வந்தோம். பாஜகவைப் பொறுத்தவரை அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த முதல்வர் தகுதி அண்ணாமலைக்கு உண்டு என்று சொல்லி வந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா.


பழனிக்கு வேண்டுமானால் காவடி தூக்கலாம். அண்ணாமலைக்கு எப்படி தூக்க முடியும்?. எடப்பாடியார்தான் முதல்வர் என்று நாம் சொல்லி வந்தபோது, அவருடன் கூட இருந்தவர்கள், வாழ்க அண்ணாமலை, வருங்கால முதல்வர் அண்ணாமலை என்று கோஷம் போட்டால் நாம் என்ன இளிச்சவாயர்களா?


இதையடுத்தே ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து புகார் கூறினோம். அதன் பிறகு தைரியமாக, ஆனந்தமாக, வீரத்தின் விளை நிலமாக பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற முடிவை எடப்பாடியார் எடுத்தார் என்று கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.


அதிமுக - பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் தொடருமா என்ற சின்ன நப்பாசை சிலரிடம் இருந்து வருகிறது. ஆனால் அதிமுக தலைவர்களும், பாஜக தரப்பில் ராம சீனிவாசன் போன்றவர்களும் பேசி வருவதும், பேட்டி தருவதையும் பார்த்தால் அதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே போவது போலத்தான் தெரிகிறது.


இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலை தரப்பு மறுத்ததால்தான் கூட்டணியை முறித்ததாக திண்டுக்கல் சீனிவாசன் தேங்காய் உடைப்பது போல கூறியிருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்