Twitter trolls.. சிஎஸ்கே ஃபேன்ஸ் மற்றும் ஆர்சிபி ஃபேன்ஸ்.. தல தோனி என்ன சொல்லிருக்கார்னு பாருங்க!

May 24, 2024,12:54 PM IST

சென்னை: டிவிட்டரால் எந்த லாபமும் இல்லை. அதில் தேவையில்லாத வாக்குவாதங்கள், விவாதங்கள்தான் நடக்கிறது.  உருப்படியில்லாத விஷயங்கள்தான் அங்கு அதிகம் நடக்கிறது.  ஒரு நல்லது கூட டிவிட்டரில் நடப்பதில்லை.. சர்ச்சைகளும், தேவையில்லாத சண்டைகளும்தான் அங்கு நடக்கின்றன. இதனால்தான் நான் டிவிட்டரை விரும்புவதில்லை என்று கூறியுள்ளார் தல தோனி.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது முதல் டிவிட்டரில் இரு அணி ரசிகர்களும் கடுமையாக சண்டை போட்டு வருகின்றனர். ஏதோ இரு நாட்டு அணிகளின் ரசிகர்கள் போல இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.


தோனியை கிண்டலடித்து ஒரு கூட்டமும், விராட் கோலியைக் கிண்டலடித்து இன்னொரு கூட்டமும் என தாறுமாறாக டிவிட்டரையே போர்க்களமாக்கியுள்ளனர். இந்த நிலையில் தோனி அளித்துள்ள ஒரு பேட்டி கவனம் ஈர்த்துள்ளது. துபாயைச் சேர்ந்த 103.8 என்ற யூடியூப் சானலுக்கு அவர் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் பேட்டி குறித்த விவரம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. பேட்டியில் தோனி கூறியிருப்பதிலிருந்து சில:


டிவிட்டர் பிடிக்காது இன்ஸ்டாகிராம் ஓகே:




எனக்கு டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம்தான் பிடிக்கும். டிவிட்டரில் நல்லது எதுவும் நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில். எப்போது பார்த்தாலும் அதில் ஏதாவது சர்ச்சைதான் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாராவது எதையாவது எழுதுவார்கள். அது சர்ச்சையாகும் அல்லது சர்ச்சையாக்கப்படும். எனக்கு எதற்கு அது.. தேவையில்லாதது.  நான் எதையாவது போடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து பலர் அவரவர் இஷ்டத்திற்கு கற்பனை செய்து கருத்துக்களைச் சொல்லி அது கடைசியில் சர்ச்சையாகி விடும்.


அதனால்தான் நான் டிவிட்டரை விரும்புவதில்லை. இன்ஸ்டாகிராம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏதாவது படத்தைப் போட்டோமோ, வீடியோ போட்டோமா என்று போய்க் கொண்டே இருக்கலாம். இன்ஸ்டாகிராமும் கூட இப்போது மாறி வருகிறது.  நான் அதில் தொடர்ந்து இருக்கிறேன். ஆனால் பெரிதாக ஆக்டிவாக இல்லை.  இதெல்லாம் தேவையில்லாத கவனச் சிதறல்கள்தான்.  எப்போதாவது ஏதாவது படத்தைப் போட்டு வைப்பேன்.  ரசிகர்களுக்கு நான் எங்கு இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கத்தான் பெரும்பாலும்ா புகைப்படம் போடுவேன்.


உடல் திறன் மிக மிக முக்கியம்:




எந்த விளையாட்டாக இருந்தாலும் முக்கியமானது பிட்டாக இருப்பதுதான். வருடம் முழுவதும் விளையாடும்போது நமது உடல் திறனை பிட்டாக வைத்துக் கொள்வது கடினமானது. அதிலும் இளைஞர்களுடன் இணைந்து விளையாடும்போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது அதிக கவனம் தேவைப்படும். தொழில்முறை கிரிக்கெட் என்பது சாதாரணமானதல்ல, மிக மிக கடினம். யாரும் உங்களுக்கு எந்த சலுகையும் தர மாட்டார்கள். அந்த லெவலுக்கு நீங்கள் விளையாட வேண்டும் என்றால் அந்த அளவுக்கு நீங்கள் தயார் நிலையில், ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்களை விட இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு இணையாகவாவது இருக்க வேண்டும்.


வயது உங்களுக்கு கருணை காட்டாது. எனவே  சாப்பாட்டு முறை, உடற்பயிற்சிகள், பயிற்சிகள் என எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். இதற்கெல்லாம் கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். இதனால்தான் நான் சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறியுள்ளார் தோனி.


ஒரு காலத்தில் தோனியும் டிவிட்டரில் இருந்தார். ஆனால் 2021ம் ஆண்டோடு அதற்கு குட்பை சொல்லி விட்டார்.  அந்தப் பக்கமே அவர் போவது கிடையாது. இன்ஸ்டாகிராமிலும் கூட எப்போதாவதுதான் போஸ்ட் போடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்