சென்னை: ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நான் இன்னும் சில காலம் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன் என்ற தோனியின் பதிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சூப்பர் கிங்ஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது தல தோனி தான். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகவே மாறிவிட்டார். தோனி இல்லாத இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் இன் நம்பிக்கை நாயகனாகவும் நட்சத்திரமாகவும் விளங்குகிறார் தோனி . எப்போதுதான் ஐபிஎல் தொடர் வருமோ தல தரிசனத்தை ஒருமுறையாவது காண்போம் என ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் மிகுந்த பேச்சு தோனியை உணர்ச்சி பொங்க வைக்கிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் களமிறங்கும் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் ஒரு சிக்சர் அடித்தாலும் அந்த அரங்கமே அதிரும் சத்தத்தை கேட்டால் அப்பப்பா சொல்லவே முடியாது.சத்தம் காதுகளை பீறிக் கொண்டுதான் செல்லும். அந்த அளவிற்கு ஜெயிச்சாலும் தோற்றாலும் மீசையை முறுக்கனும் என்ற பஞ்சு கேற்ப, ஜெயித்தாலும் தோற்றாலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை பிரதிபலித்துக் கொண்டு தனது நுட்பமான செயல்திறனால் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் செயல் மிகப்பெரும் ரசிகர்களின் மனதை சம்பாதித்துள்ளது. இதனால், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் இந்தியா அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து பல்வேறு வரலாற்று சாதனைகளை புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ். தோனியின் தலைமையில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது .கடந்த முறை ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த கவலையுற்றனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தோனி களமிறங்குவதாக தகவல்கள் வெளியானது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் கடந்த சீசனில் விளையாடினார். அப்போது ஐபிஎல் தொடரில் தோற்றாலும் தோனி விளையாடினால் போதும் என்ற மனநிலைமையை தொடர்ந்து ரசிகர்கள் வெளிப்படுத்திக் கொண்டே வந்தனர்.
இதனால் ஒவ்வொரு முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் தோனி களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த முறையும் தோனி ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோனியின் பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
42 வயது ஆகும் தோனி தனது எதிர்காலம் குறித்து மனம் திறந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். என்னால் அதை செய்ய முடியும் என ரசிகர்கள் அறிவார்கள். நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனவே சிறப்பாக ஆடி அணிக்கு உதவ வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பேன். என்னை பொருத்தவரை கிரிக்கெட்டுக்குத்தான் முன்னுரிமை. மற்றவை எல்லாம் அடுத்து தான் என கூறியுள்ளார். எனவே தல தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் சில காலம் விளையாடுவார் என்று உறுதிப்படுத்தியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?
PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை
ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு
ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்
Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!
கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!
உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!
மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!
{{comments.comment}}