டெல்லி: நீட் தேர்வு மாபெரும் முறைகேடானது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தன்னைத் தவிர எல்லோரையும் இதில் பொறுப்பாளியாக்கப் பார்க்கிறார் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
லோக்சபா இன்று காலை கூடியதும் புதிய உறுப்பினர் பதவியேற்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசும்போது அரசையும், கல்வி அமைச்சரையும் குற்றம் சாட்டிப் பேசினார்.
ராகுல் காந்தி பேசுகையில், நமது தேர்வு முறையில் மிகப் பெரிய தீவிரமான பிரச்சினை எழுந்துள்ளதை நாடு இப்போது அறிய ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் அமைச்சர் தன்னைத் தவிர எல்லோரையும் பொறுப்புக்குள்ளாக்கி குற்றம் சாட்டுகிறார். என்ன நடக்கிறது என்ற அடிப்படை கூட அவருக்குத் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லது புரியாதது போல நடந்து கொள்கிறாரா என்றும் தெரியவில்லை.
பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது, கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தேர்வு முறையில் நடந்து வரும் முறைகேடுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதுதான் இப்போது பிரச்சினை. நீங்கள் பணக்காரராக இருந்தால் உங்களால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்க முடியும் என்று லட்சக்கணக்கானோர் நினைக்கின்றனர். இதே கவலைதான் எங்களுக்கும் உள்ளது என்றார் ராகுல் காந்தி.
இந்த பேச்சுக்கு பதில் அளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், நான் எனது தலைவரின் கருணையால் இந்தப் பதவியில் இருக்கிறேன். எனது பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியவர் அவர்தான். இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்த அரசும் பொறுப்பாகும். அரசு சார்பில்தான் நான் பதிலளிக்கிறேன்.
எனது தொகுதி மக்கள் நான் தேவையா இல்லையா என்பதற்கு பதிலளித்து விட்டனர். நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் எந்த அறிவு ஜீவியின் சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. நீங்கள் கத்திப் பேசினால் பொய் உண்மையாகி விடாது. நமது நாட்டு தேர்வு முறையை மோசடி என்று சொல்லியுள்ளார்கள். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இப்படி ஒரு துரதிர்ஷ்டவசமான வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. இதை நான் கண்டிக்கிறேன்.
2010ம் ஆண்டு கல்வி தொடர்பான 3 மசோதாக்களை அப்போதைய அமைச்சர் கபில் சிபல் தாக்கல் செய்தார். அதில் ஒன்றை பின்னர் திரும்பப் பெற்றனர். யாருடைய அழுத்தத்தின் பேரில் அது திரும்பப் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதா.. இதை அவர்கள் விளக்க வேண்டும். இவர்கள் எங்களைக் கேள்வி கேட்கிறார்கள்.
கடந்த 7 வருடமாக நீட் தேர்வு நடந்து வருகிறது. 240க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. 5 கோடிக்கும் மேலானோர் இதை எழுதியுள்ளனர். இதுவரை எந்த முறைகேடும் நடந்ததில்லை. மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை என்றார் தர்மேந்திர பிரதான்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}