சென்னை: தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இன்று ரிலீஸான நிலையில் படம் குறித்த பாசிட்டிவான கருத்துக்களை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டிராகன். இப்படத்தை இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே படத்தின் மூலமாக புகழ்பெற்ற நாயகனாக மாறிய பிரதீப் ரங்கராஜன் டிராகன் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவருடன் மிஸ்கின், கௌதம்மேனன், காயாடு லோஹர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், டிராகன் படம் இன்று பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இப்படம் முதல் பாதையில் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையை கொண்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்தில் உள்ள காட்சி நகர்வுகள் ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லாமல், போர் அடிக்காமல் அமைந்திருப்பதால் படம் சூப்பர் எனவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், டிராகன் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்து கொண்டிருப்பதால் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இவர்களுடன் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
தனுசு இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தனுஷ் ரசிகர்களே மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஒரே மாதிரியாக ஆக்சன் படங்களாக வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது காதல் பின்னணியில் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே சிக்கிக் கொள்ளும் இளைஞனின் கதையை பிரதிபலித்து இறுதியில் காதல் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியை தழுவியதா என்பதை சொல்லும் படமாக அமைந்துள்ளதாம்.
அதாவது பழைய காதல் கதை தான் என்றாலும் கூட அதை புது விதமாக சொன்ன தனுசை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை சுருக்கி Neek ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
{{comments.comment}}