கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கேப்டன் மில்லர் படத்தை காண வந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முழு கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்து கேப்டன் பில்லர் ரிலீஸ்சையும் பொங்கல் பாண்டிகையையும் சேர்த்து கொண்டாடியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். 17 வருட போராட்டத்திற்கு பிறகு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் மூலமாக இயக்குனராக மாறியவர் அருண் மாதேஸ்வரன். இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
விஜி சந்திரசேகர், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிய இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் நடிப்பு சூப்பர். கதைக்களமும் அருமையாக அமைந்துள்ளது. இப்படத்தில் நடித்த நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேடங்களை சிறப்பாக செய்துள்ளனர் என்று பலரும் பேசி வருகின்றனர். இயக்குனரும் சமூகத்திற்கு தேவையான செய்தியை கொடுத்து அசத்தியுள்ளார் என்று ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கும் கரும்பு வழங்கி ரசிகர்கள் படத்தின் வெற்றியுடன் பொங்கலையும் சேர்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள். இது சூப்பர்ல!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}