- அஸ்வின்
சென்னை: சமீபத்தில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே தீயைக் கிளப்பியுள்ளது. செம பரவசத்தில் உள்ளனர். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இப்பொழுது இந்தப் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார் .. அவர்தான் பிரகாஷ்ராஜ். தனுஷுடன், பிரகாஷ் ராஜ் முதல் முறையாக கைகோர்த்த திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம். திருவிளையாடல் ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து வேங்கை படத்தில் இருவரும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து வந்த படம்தான் அசுரன். பின்னர் திருச்சிற்றம்பலம் படத்தில் இருவரும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள்.
திருச்சிற்றம்பலத்திற்கு அப்புறம் இந்த படத்தில் இருவரும் கைகோர்க்கிறார்கள். திருவிளையாடல் ஆரம்பத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை இயக்குனர் பூபதி பாண்டியன் கையாண்டிருப்பார். குருவாக பிரகாஷ் ராஜும் திருவாக தனுஷும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதேபோல இயக்குனர் ஹரியும் வேங்கை திரைப்படத்தில் மிகவும் ஒரு கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார். அசுரன் திரைப்படத்திலும் பிரகாஷ்ராஜ் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பார்.
இயக்குனர் மித்ரன் தனுஷ் கைகோர்த்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் மிகவும் ஒரு கண்டிப்பான ஒரு தந்தையாக அந்த படம் முழுவதும் பிரகாஷ்ராஜ் வலம் வந்திருப்பார். மகன் மீது பாசம் வைத்திருக்கும் அந்த தந்தை கண்டிப்பாகவும் இருப்பார். அந்த அப்பா மகனுக்கான அந்த ஒரு பாசப்பிணைப்பு அந்த படம் முழுவதும் நம்மால் அந்த ஒரு கதாபாத்திரங்களை உணர முடியும். பலரையும் இந்தப் படம் கவர்ந்ததற்குக் காரணம், நிஜ வாழ்க்கையிலும் பலர் இது போன்ற அப்பா, மகன்களாக இருப்பதுதான்.
இப்பொழுது ராயன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்து இருப்பது அந்த படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது. ஏனென்றால் தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கியபோது, அந்தப் படத்தை ஆக்ஷன் கலந்த குடும்ப திரைப்படமாக அமைத்திருந்தா். ஆனால் ராயன் அதற்கு அப்பாற்பட்டு ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஏனென்றால் முதல் போஸ்டரிலேயே சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தனுஷ் மூவரும் அதுபோன்ற தோற்றத்தில் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக வரும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது எஸ் ஜே சூர்யாவின் பங்களிப்பும். இப்போது பிரகாஷ் ராஜும் உடன் இணைந்திருப்பதால், படத்திற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது.
கண்டிப்பாக ஒரு திருவிளையாடல் ஆரம்பத்தை போல, ஒரு அசுரனை போல, ஒரு திருச்சிற்றம்பலத்தைப் போல, ஒரு வேங்கை போல வரவேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. தனுஷ் இதை எந்த அளவுக்கு வலிமையோடு எடுக்கப் போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}