சென்னை: மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனம் மூலம் ரூபாய் 525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், வின் டிவி உரிமையாளரும், யாதவ மகாசபை தலைவர் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவருமான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் தேவநாதன் யாதவ். தேவநாதன் மயிலாப்பூரில் உள்ள இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது நினைவிருக்கலாம்.
தேர்தல் சமயத்தில் இவர் மீது பண மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் முதலீடுகளைப் பெற்று 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இவர் மீது 140க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்த நிலையில் தேவநாதனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியை வைத்திருப்பதாகவும் பலர் உறுப்பினராக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் நிரந்தர வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் முதிர்வு காலம் முடிந்தும் முதிர்ச்சி தொகையை இதுவரை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவநாதன் மீது தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
அண்ணாமலை கண்டனம்:
இந்தக் கைது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள அறிக்கையில்,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில்
தமிழ்நாடு பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}