அக்காக்களே, அம்மாக்களே.. ஏப்ரல் 19.. மறக்காம ஓட்டு போடுங்க.. டிராமா போட்டு டீச் பண்ண மாணவர்கள்!

Apr 17, 2024,06:45 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது. 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் இது.


நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. முதல் நாள் திருவிழா, ஏப்ரல் 19ம் தேதி அதாவது நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. அன்றுதான் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்றுதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது.




அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நாடகம் போட்டு அசத்தியுள்ளனர்.  தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வில்  ஈடுபட்டனர்.


மாணவி  கனிஸ்கா  ,லெட்சுமி,நந்தனா ,ஜெயஸ்ரீ ஆகியோர்  ஓட்டுக்கு பணம் கொடுத்த தூக்கிப் போடுங்க என்கிற  விழிப்புணர்வு  பாடலை பாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். "பணத்திற்காக நீயும்தானே ஓட்டளிக்காதே, நீயும் வித்துப்புட்டு பிறகுதானே தெருவில் நிற்காதே" என்று வரும் பாடல் வரிகளுடன் விலையில்லா ஓட்டுரிமையை நீங்கள்  விற்காதீர் என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவர்கள்  தீபா, கார்த்திக் ஆகியோர் ராகத்துடன் பாடினார்கள்.




நாடகம் வாயிலாக , நாங்கள் ஓட்டை நோட்டுக்கு போடமாட்டோம் , நாட்டு நன்மைக்குத்தான் போடுவோம் என்பதை வெளிப்படுத்தி ,உங்கள் விரலின் மை எல்லாக்கரையையும் போக்கட்டும் என்றும்,வாக்கை விற்பனை செய்தவரின்  நிலையை விளக்கும் வகையில்  நாடகங்களை மாணவர்கள் யோகப்பிரியா, கனிஸ்கா, முகல்யா, கார்த்திக், ரித்திகா, சாதனாஸ்ரீ, தனலெட்சுமி , கவிஷா ஆகியோர் நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.




வாக்குரிமை என்பது நமது வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்து விடாமல் இருக்க அழகான கவிதையை கூறி அசத்தினார்கள்  மாணவி ஏஞ்சல் ஜாய் , ரித்திகா,. பாடல் மூலம் தேர்தல் விழிப்புணர்வை மாணவர்கள் சபரீஸ்வரன்,சபரி வர்ஷன்,சுஜன்,விஜய்கண்ணன் ஆகியோர்   விளக்கினார்.


ஆசிரியை முத்துமீனாள்  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார்  தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.  ஆசிரியர்கள் முத்துமீனாள், ஸ்ரீதர்  ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். வருவாய் ஆய்வாளர் மாலதி , கிராம நிர்வாக அலுவலர்  அருணாச்சலம்  உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு பார்த்து ரசித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்