6 முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தாலே போதும்.. அரசுத் தேர்வுகளில் ஈஸியா பாஸ் ஆகலாம்!

Dec 09, 2024,04:14 PM IST

சிவகங்கை : 6 முதல் 12 வரைவிலான பாடநூல்களை படித்தாலே அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம். கல்வி மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தரும் என கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மாணவர்களிடம் வலியுறுத்தி பேசினார்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் வானொலி ஒருங்கிணைப்பாளர்  கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோரை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 




இதனை தொடர்ந்து மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது வேல்முருகன் மாணவர்களிடம் பேசுகையில், 


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மட்டுமே மிகுந்த உதவியாக இருக்கும்.படிப்பு ,படிப்பு ,படிப்பு என்பது வாழ்க்கையில் எப்பொழுதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாடு அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட நூல்களைப் படித்தால் ஐஏஎஸ் தேர்வு வரை மிக எளிதாக பதிலளிக்கலாம்.




ஆறாவது முதல் 10 வரையிலான படிப்பை கவனமுடன் படியுங்கள். அந்த புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகிறது. எனவே கல்வியை முக்கியமாக வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி தானாக வந்து சேரும். கல்லூரிக்கே  போகாமல் மாநில மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.


 நான் பலமுறை போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் முயற்சி செய்ததால் மாநில அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பிறகு அப்பணியில் இருந்து மத்திய அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று மத்திய அரசு ஊழியராக பணியாற்றி கிறேன்.எனவே நன்றாகப் படியுங்கள். வாழ்க்கையில் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என பேசினார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில்.. தவெக தலைவர் விஜய்.. பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக ஆஜர்!

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

20வது நெக்சஸ் பிசினஸ் இன்குபேட்டர் கூட்டமைப்பிற்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது.. அமெரிக்கத் தூதரகம்

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Copyrights case... நடிகர் தனுஷ் நயன்தாரா மீது தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8ல் இறுதி விசாரணை

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

2025ல் இயற்கை கோரத்தாண்டவமாடும்.. அரசியல் கலகங்கள் தலைதூக்கும்.. ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணிப்பு

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்