சாப்பாடு மட்டும் சத்துணவு அல்ல.. எங்க மாணவர்களும் சமத்துதான்.. தேவகோட்டை பள்ளியின் பெருமிதம்!

May 30, 2024,01:16 PM IST

தேவகோட்டை:  தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோர்களின் பாராட்டை பெற்று வருகிறது தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி. தங்களது பள்ளி மாணவர்கள் சுத்தம், சுகாதாரம் என சகல ஒழுக்கங்களிலும் கெட்டிக்காரர்களாக உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் மதிய சத்துணவு  திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.  பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பெருமிதத்துடன் கூறியதாவது :   




எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின்  பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள். இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம்.


ஒவ்வொரு மாணவரும் தூய்மையான  கைகுட்டையின்  மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு சாப்பிடுகிறார்கள். டவலில் சாப்பிட்டு சிந்தாமல் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும்  இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர்கள் எங்களிடம் தெரிவித்து சந்தோசம் அடைந்தனர்.




எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல்  வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைக்கின்றனர். இதன் மூலம்  மாணவர்களிடையே சகோதரத்துவம் வளருகிறது. ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள முழுவதையும்  சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.


இதன் மூலம் மாணவர்களின் வீடுகளிலும் உணவினை வீணாக்காமல் மாணவர்கள் முழுவதுமாக சாப்பிட்டு விடுவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து செல்கின்றனர். சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர். 




ஒவ்வொரு  வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடு சொல்கிறோம். மதிய உணவு  எப்படி இருந்தது என்பதை மாணவர்களே என்னிடமும்,சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து சொல்கிறன்றனர்.


இது நிச்சயமாக தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் புதிய அனுபவமாக இருக்கும். இதனை தொடர்ந்து பல  ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார் லெ .சொக்கலிங்கம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்