தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!

Apr 17, 2025,11:09 AM IST

சிவகங்கை: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவி  வெற்றி பெற்று சாதனை  படைத்துள்ளார்.

தொடர்ந்து பல  ஆண்டுகளாக தேவகோட்டை பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்படும். பின்னர் அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஆயிரம்  ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்தி வருகிறது.




அதன்படி, கடந்த மாதம் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 6695  மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்று, அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள் ஆவார். இதில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவி தீபா    தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி    பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவியை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்து மீனாள்,டெனிஷா   மற்றும் மாணவியின்  பெற்றோர்  பரிசுகள்  வழங்கி பாராட்டினார்.



இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தீபா     கூறுகையில்,


நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது  வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,எனது பெற்றோர்கள் விடா முயற்சியே காரணம்.அவர்களுக்கு நான்  நன்றி தெரிவிக்கிறேன் .  எனது அப்பா கூலி  தொழில் செய்து என்னையையும்,என் அக்காவையும்   படிக்க வைத்து வருகின்றார். பள்ளி விடுமுறையிலும் , முக்கிய பண்டிகை  நேரத்திலும் எனது வீட்டுக்கே வந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய தொடர் சிறப்பு பயிற்சியின் காரணமாகாவே நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார். 

                 

இந்த மாணவி படிப்பில் திறமையாக இருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை எண்ணற்ற சான்றிதழ்களும்,பல  பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வு  முடிவுகள் முக்கியமானது.

நடுநிலைப்பள்ளி அளவில் இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் கடந்த சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்.எம்.எம்.எஸ்.தேர்வில் தேர்ச்சி வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்