மதுரை: ஜனவரி 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்துள்ள காளைகள் மற்றும் காளையர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 காளையர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அலங்காநல்லூர் மேங்கிப்பட்டி கீழக்கரையில் 44 கோடி ரூபாய் செலவில்,மிகப் பிரம்மாண்டமான அதிநவீன வசதியுடன் கூடிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டது.
இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தை வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுஉள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய அரங்கத்தில் திறப்பு விழா கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அரங்கத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற பல்வேறு நிபந்தனைகளும் வரையறுக்க பட்டிருந்தது .இதனை ஏற்ற மாடுபிடி வீரர்களும் மற்றும் காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த முன்பதிவுக்கான விவரம் தற்போது வெளியாகி உள்ளன.
இதன்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு பங்கேற்க 9,312 காளைகளும் 3,669 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}