1300 ஊழியர்களை நீக்கிய கையோடு.. கம்பெனி தலைவரையும் வேலையை விட்டு அனுப்பிய ஜூம்!

Mar 06, 2023,01:12 PM IST
லண்டன்: ஜூம் நிறுவனம் தனது ஊழியர்கள் 1300 பேரை வேலையை விட்டு நீக்கியது. அது முடிந்து சில நாட்களிலேயே தற்போது தனது நிறுவனத்தின் தலைவரையும் பதவியை விட்டு நீக்கி விட்டது.



வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஜூம். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உலகமே ஜூம் பக்கம் தான் விழுந்து கிடந்தது. மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சிக்கு ஜூம் முதல் படியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. இந்த நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.




சமீபத்தில்தான் இந்த நிறுவனம் 1300 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. தற்போது அதன் தலைவர் கிரேக் டோம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணி ஒப்பந்தம் எந்தக் காரணமும் சொல்லப்படாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

டோம்ப் கூகுள் நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர் ஆவார். வர்த்தகரும் கூட. கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இப்பணியில் அவர் சேர்ந்திருந்தார். அப்போது முதல் மிகத் தீவிரமாக பணியாற்றி வந்தார். இவரது தலைமையில் ஜூம் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியையும் அடைந்தது.  அவருக்குப் பதில் யார் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்பது தெரியவில்லை.

2011ம் ஆண்டு ஜூம் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதை உருவாக்கியவர் எரிக் யுவான். அவர்தான் தற்போது தலைமை செயலதிகாரியாக உள்ளார். மிகப் பெரிய வளர்ச்சி கண்ட அந்த நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பிப்ரவரி 7ம் தேதி 1300 பேரை அது நீக்கியது.  மேலும் யுவான் தனது சம்பளத்தில் 98 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்தார். பிற அதிகாரிகளின் சம்பளமும் 20 சதவீதம் குறைக்கப்பட்டது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. டிவிட்டர்தான் இதை மிகப் பெரியஅளவில் ஆரம்பித்து வைத்தது. இன்று வரை தொடர்ந்து ஆட்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. கூகுள்,  மைக்ரோசாப்ட், பேஸ்புக்,மெட்டா என பெரிய பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்களை வேலையை விட்டு அனுப்பி வருவதால் இன்று இருக்கிறோம்.. நாளை வேலையில் தொடர்வோமா என்று தெரியாத நிலையில்தான் ஊழியர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்