ரஜினி 170:  "மீண்டும் இணைவதில் பெருமிதம்".. சஸ்பென்ஸ் உடைத்த லைக்கா..  குஷியில் ரஜினி ரசிகர்கள்!

Mar 02, 2023,02:46 PM IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் 170வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



லைக்கா தயாரிப்பு நிறுவனம் நேற்று தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நாளை காலை 10.30 மணிக்கு மிக பெரிய அறிவிப்பை தெரிவிக்கவுள்ளோம் என சஸ்பென்ஸுடன் பதிவு ஒன்றை பதிவிட்டது. ஒன்றும் இல்லாத விஷயத்தையே ஊதி பெருசாக்கும் நம்ம நெட்டிசன்கள் லைக்காவின் இந்த சஸ்பென்ஸை சும்மாவா விட்டாங்க. 




அஜித் படத்தின் அறிவிப்பா இருக்குமோ, தளபதி படத்தின் அறிவிப்பா இருக்குமோ, இல்லை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருக்குமோ என சஸ்பென்ஸ் தாங்கமுடியாமல் குழம்பிப்போயினர். குழப்பத்தில் சோறு தண்ணி இல்லாமல் இருந்த நெட்டிசன்களை அசுவாசம் படுத்தும் விதமாக சொன்னபடியே லைக்கா தயாரிப்பு நிறுவனம் 10.30 மணிக்கு சஸ்பென்ஸை உடைத்து. 

லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு லைக்கா நிறுவனம் நடிகர் ரஜினியின் 170வது படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வரும் தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரஜினியின் 2.0 , தர்பார் ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரஜினியும், லைக்கா நிறுவனமும் கூட்டணி அமைந்துள்ளனர். ஜெய்பீம் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே அண்ணாந்து பார்க்கவைத்த இயக்குநர் ஞானவேல் தற்போது சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூடியுள்ளது. 

மேலும் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். இப்படி பம்பரமாக சுழன்றுவரும் ரஜினி எப்போது லைக்கா தயாரிப்பில் நடிக்கப்போகிறார், எப்போது அடுத்த அப்டேட் வரும் என நெட்டிசன்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்