"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்".. ஸ்டாலின் நட்டு வைத்த மரக்கன்று!

Mar 01, 2023,02:05 PM IST
சென்னை:   "மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்று தனது 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.   



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிறந்தநாள்  கொண்டாட்டத்தை தடபுடலாக்கியிருந்தனர்.



இன்று மாலை ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரமாண்ட பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..




ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜாவும் வாழ்த்தியிருந்தார்.



இந்நிலையில் தனது 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக ஸ்டாலின் போட்டிருந்த டிவீட்டில், "மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன் என கருணாநிதியின் வசனத்தை சுட்டிக்காட்டி ட்விட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்