மு.க.ஸ்டாலின் இனி "ஆல் இந்தியா தலைவர்".. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Mar 04, 2023,10:30 AM IST
சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இனியும் பிராந்திய தலைவர் கிடையாது. அவர் ஆல் இந்தியா தலைவர் என்று ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்காக காங்கிரஸ்காரர்களை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.




பண பலம் மிகப் பெரிய அளவில் களமாடியது. திமுக கூட்டணித் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் சரி சமமாக பணத்தை இறக்கி விளையாடியதாக பல்வேறு செய்திகள், புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இருப்பினும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாக பொருத்தமாக கூறியுள்ளார். அவர் இனியும் பிராந்தியத் தலைவர் இல்லை. அவர் ஆல் இந்தியா தலைவர்.   அவர் சொன்னது போல அவர் ஏற்கனவே அகில இந்திய அரசியலில் இருக்கிறார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், மக்கள், மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார், எப்படிச் செயல்படுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து அதை பின்பற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் அவர் அகில இந்திய தலைவர்தான் என்றார் இளங்கோவன்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்