"சார் ஒரு செல்பி"..  இதுதான்  கண்டிஷன்.. ஓ.கே.சொன்ன பெண்.. கலகலக்க வைத்த அமைச்சர்!

Feb 14, 2023,11:02 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது செல்பி எடுக்க வந்த பெண்ணிடம், கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டால் போட்டோ எடுக்கலாம் என்று கூறி அமைச்சர் சி.வி. கணேசன் கலகலக்க வைத்தார்.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியினரை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மறுபக்கம் இரட்டை இலை களத்தில் நிற்பதால் திமுகவினர் மிக மிக உஷாராக உள்ளனர்.


எந்த ஒரு வகையிலும் பின்னடைவு வந்து விடக் கூடாது என்பதில் திமுக தரப்பு கவனமாக உள்ளது. இதனால் அமைச்சர்கள் படையே பிரசாரத்தில் குதித்துள்ளது. மூத்த அமைச்சர்கள் முதல் இளையவர்கள் வரை அத்தனை பேரும் இறங்கி வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் தனது குழுவினரோடு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.  திருநகர் 24 வது வார்டு , கிருஷ்ணப்பாளையம்காலனி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் செய்தார்.  வரிசையாக ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்டு வந்த அமைச்சர் கணேசன், ஒரு டீக்கடையைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே புகுந்தார்.


பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ


டீ மாஸ்டரிடம் நான் ஒரு டீ போட்டுத் தர்றேன் என்று கூறி டீ போட ஆரம்பித்தார். சும்மா சொல்லக் கூடாது.. சூப்பராகவே போட்டார். பின்னர் அந்த டீயை அனைவருக்கும் கொடுத்தனர். அதன் பின்னர் அங்கிருந்தோரிடம் மறக்காம எல்லோரும் கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறி விட்டு விடை பெற்றார் கணேசன்.


பின்னர் அவரது பிரசாரத்தின்போது ஒரு பெண் அவரிடம் வந்து சார் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்கவே, தாராளமாக எடுத்துக்குங்க.. ஆனால் கை சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடணும் என்று கூறி சந்தடி சாக்கில் ஒரு ஓட்டை கன்பர்ம் செய்து விட்டார் அமைச்சர். அதன் பின்னர் அப்பெண்ணுடன் ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டார்.


சமீபத்திய செய்திகள்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்