சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி வென்றதற்கு முக்கியக் காரணம்.. ஒற்றுமை மட்டுமே. கருத்து வேறுபாடுகளை மனதில் கொண்டு செயல்பட்டால் நஷ்டம்தான் மிஞ்சும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.. அவர் கொண்டாடினார் என்பதை விட திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், தேசியத் தலைவர்களும் இணைந்து கொண்டாடினர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் : ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அணி திரண்டனர். கார்கே, தேஜஸ்வி சூர்யா, அகிலேஷ்யாதவ், கருணாநிதி காலத்து நண்பர் பரூக் அப்துல்லா என பலரும் திரண்டு வந்திருந்தனர். தமிழ்நாட்டு கூட்டணித் தலைவர்களும் முழு அளவில் வந்திருந்தனர்.
தலைவர்கள் அனைவரும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர். ஸ்டாலின் பேசும்போது, அப்படி ஒன்றிணையாமல் போனால் நஷ்டம் நமக்குத்தான் என்று அடித்துப் பேசி தேசிய அளவில் ஒரே எதிர்க்கட்சி அணிஅமைய வேண்டியதன் அவசியத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
மு.க.ஸ்டாலின் பேச்சிலிருந்து சில துளிகள்:
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம், அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்ததே. இதை தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.
2024 லோக்சபா தேர்தலில் நாம் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது -யார் ஆட்சி அமைப்பது, யாருடைய தலைமையில் ஆட்சி அமைவது என்பது அல்ல. மாறாக, பாசிச சக்திகளை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றத் துடிக்கும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். இதை மட்டுமே மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே புள்ளியில் ஓரணியில், ஒரே கூட்டணியாக அணி திரள வேண்டியது மிக மிக முக்கியம், கட்டாயம். பாஜகவுக்கு எதிரான ஒத்தகருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒரே குடையில் திரண்டால்தான் நாம் பாஜகவை வெல்ல முடியும்.
நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்துக் கூட்டணியை முடிவு செய்ய முயன்றோம் என்றால் அது நஷ்டத்தில்தான் போய் முடியும். தமிழ்நாட்டில் நாங்கள் எப்படி வென்றோம் என்பதை பாருங்கள்.. அதே பாணியில் தேசிய அளவில் அணி திரள முயற்சிப்போம். இதை இங்குள்ள கட்சிகளுக்கு மட்டுமல்ல பாஜகவுக்கு எதிரான அத்தனைக் கட்சிகளுக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
எனக்கு 70 வயதாகி விட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஆனால் வழக்கம் போல எனது பணிகள் தொடரும். மார்ச் 1ம் தேதி வந்தால்தான் எனது வயதே எனக்குத் தெரிகிறது. எனது பயணம் மிக நீண்டது,நெடியது. 14 வயதில் தொடங்கிய இந்த பயணம் மக்களுக்காக என்றென்றைக்கும் தொடரும். இந்த நேரத்தில் நான் எனது ஒரே ஆசையை வெளிப்படுத்த விரும்புகிறேன் - அண்ணா உருவாக்கிய, கலைஞர் கட்டிக் காத்த இந்த கழகத்தின் ஆட்சி நிரந்தரமாக தமிழ்நாட்டில் தொடர வேண்டும்.. இதை நிறைவேற்ற அனைவரும் பாடுபடுவோம்.
உடன்பிறப்புகளே.. இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள்..
நாற்பதும் நமதே! நாடும் நமதே. இதுவே நான் வேண்டும் பிறந்தநாள் பரிசு என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
{{comments.comment}}