மும்பை : சுஷ்மிதா சென்னை தெரியாதவர்களே இருக்க முடியாது. பிரபல பாலிவுட் நடிகை, பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றவர் என அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 47 வயதாகும் சுஷ்மிதா சென் தான் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி ஃபிட்னசில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர் சுஷ்மிதா. தனது ஃபிட்னஸ் வீடியோக்களை சோஷியல் மீடியா பக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டவர். ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக் கூடியவர். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுவதை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனால் சுஷ்மிதா தனது பேட்டியில் கூறி உள்ள தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அவர் தனது பேட்டியில், 2014 ம் ஆண்டு எனக்கு Addison's disease என்ற விநோத நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆடிசன்ஸ் நோய் என்பது அட்ரீனல் சுரப்பி சுருங்கி, ஹார்மோன்கள் சுரப்பு குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் நோய். இதனால் ஸ்டீராய்டுகளின் உதவுடன் தான் நான் வாழ்ந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதா சென்னிற்கு உடலின் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஹார்மோன் குறைபாடு தான் ஏற்பட்டுள்ளது. ஆல்டோஸ்டிரான் ஹார்மோன் குறைபாடு உள்ளதால் ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் அளவை சமநிலையில் வைப்பது இயலாத காரியம். ஆடிசன்ஸ் நோய் எந்த வயதிலும், யாரையும் பாதிக்கக் கூடியதாகும்.
தோல் நிறம் மாறுதல், அதிக உடல் சோர்வு, அடி வயிற்றில் வலி, வாந்தி, வயிற்று போக்கு, சீர் இல்லாமல் உடல் எடை குறைதல், தசை பிடிப்பு, தசை வலி, மூட்டு வலி, நீர்சத்து குறைதல், குறைந்த ரத்த அழுத்தம், நினைவு திறன் குறைதல், குறைந்த ரத்த சர்க்கரை அளவு, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போதல் ஆகியன ஆடிசன்ஸ் நோயின் பாதிப்புக்களாக சொல்லப்படுகிறது.
{{comments.comment}}