தூத்துக்குடியில் முதல் முறையாக.. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.. வெளியானது டெண்டர் அறிவிப்பு!

Jun 08, 2024,03:41 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல் முறையாக  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நீர் இன்றி அமையாது இவ்வுலகம் என்பது போல நீர் மனித வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பண்டைய காலங்களில் எல்லாம் நீரை சேமித்து வைத்து அதனை பயன்படுத்தி வந்தனர். ஏரி, குட்டை, குளம், ஆறு இவை எல்லாம் நீர் ஆதார இடங்களாக இருந்து வந்தது. தற்போதைய காலத்தில் நீர் சேமித்து வைக்கும் இடங்களில் எல்லாம் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருவதால், மழை காலங்களில் பெய்யும் மழை நீர் போவதற்கு இடம் இன்றி கழிவுநீர்களில் கலந்து யாருக்கும் பயன்படாமல் போகின்றன.




நீரின் சிக்கனத்தை யாரும் பின்பற்றுவதும் இல்லை. பூமிக்கடியில் பல நூறு அடி குழி தேண்டி நீரை உறிஞ்சி கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்தும் வருகின்றனர். இவ்வாறு செய்வதினால் நிலத்தடி நீரும் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளன.இந்த நிலத்தடி நீர் குறைந்து வருவதினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு இடங்களில் இதனால் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி தத்தளித்து வருகின்றனர். 


பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட தொடங்கி விட்டது. கோடை காலத்தில் மட்டும் இருந்த இந்த தட்டுப்பாடு தற்பொழுது பரவலாக அனைத்து காலங்களிலும் தொடங்கி விட்டன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்போது கடல் நீரையும் குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட ஆரம்பித்துள்ளது. சென்னை அருகே மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலைியல் தற்பொழுது தூத்துக்குடியில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான டெண்டர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.


முதன் முதலாக தூத்துக்குடி மாட்டம், முள்ளக்காடு கிராம் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்காக முள்ளக்காடு கிராமத்தில் ரூ.904 கோடியில்  இதனை செயல்படுத்த டெண்டர் கோரியுள்ளது சிப்காட். அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்